திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு பக்தர்கள் உண்டியல் காணிக்கை செலுத்தியுள்ளனர்.
திருப்பதி உண்டியல் பணம்
திருப்பதி ஏழுமலையானை நாள்தோறும் தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள், உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம்.
இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு பக்தர்கள் உண்டியல் காணிக்கை செலுத்தியுள்ளனர். அதாவது, ஒரே நாளில் 6.8 கோடி ரூபாய் காணிக்கையை பக்தர்கள் உண்டியலில் செலுத்தியுள்ளனர். இதற்கு முன்னர் 2012ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி பக்தர்கள் செலுத்திய 5.73 கோடி ரூபாயே அதிகபட்ச காணிக்கையாக செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

