கமல்ஹாசன் நடித்த விக்ரம் படம் உலகம் முழுவதும் வெளியாகி உள்ள நிலையில் படத்தின் வெற்றியை ரசிகர்கள் அனைத்து திரையரங்குகளிலும் கொண்டாடி வருகின்றனர்.
கமலின் விக்ரம்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நேற்று வெளியாகி உலக முழுவதும் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் விக்ரம். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கமலஹாசன் நடிக்கும் இத்திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுயிருக்கிறது. ரசிகர்கள் திரையரங்கு முன் வெடி வெடித்து கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 800 திரையரங்குகளில் படம் திரையிடப்பட்டுள்ளது
நடிகர்கள்
இப்படத்தில் விஜய்சேதுபதி, ஃபகத் பாசில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் நரேன், காளிதாஸ் ஜெயராமன், ஷிவானி நாராயணன், மைனா நந்தினி, மகேஸ்வரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தொடர்குற்றங்களை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக பகத் பசில் நடித்துள்ளார்.
கதைக்கரு
ஓய்வில் இருக்கும் சிங்கத்தை, நரிகள் தன் தந்திரத்தால் வீழ்த்த முயல்கிறது. நரிகளின் தந்திரம் வென்றதா? சிங்கம் தன்னை தற்காத்துக் கொண்டதா? என்பது தான் கதை. நம் பார்த்து பழகிய அதே பழிவாங்கும் கதை தான் என்றாலும் கூட அவை லோகேஷ் கனகராஜ் களத்தில் விறுவிறுப்பாகிறது. படத்தின் முதல் பாதியில் ஃபகத் பாசில் திரையை தன் வசமாக்கிறார்.
எப்படி இருக்கிறது ?
‘பத்தல பத்தல’ பாடல் காட்சிகள் உள்பட கமலின் நடிப்பு பார்வையாளர்களை வியக்க வைக்கிறது. ஆனால் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கமலை திரையில் பார்க்கும் எதிர்பார்ப்பில் வரும் ரசிகர்களுக்கு ஏமாற்றமே. விஜய் சேதுபதி தனது முந்தய படத்தின் சாயல் இல்லாமல் திரையில் தோன்றி இருப்பது படத்துக்கு கூடுதல் பலம். ஃபகத் பாசில் காவல் அதிகாரியாக கட்சிதமாக பொருந்தியிருக்கிறார். காளிதாஸ் ஜெயராமன், செம்பன் வினோத், நரேன், ரமேஷ் திலக், காயத்ரி ஷங்கர் ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
சூர்யா என்ட்ரி
சூர்யாவின் என்ட்ரி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் உள்ளது. கமல் ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், ஆகிய மூன்று பெரும் யாருக்கு அதிக காட்சிகள் என்ற ஈகோ இல்லாமல் இந்த கதைக்குள் வந்திருப்பது திரையில் நன்றாக தெரிகிறது. ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் என்று யூகிக்க முடியாத வகையில் திரைக்கதை நகர்கிறது. அனிருத் இசை காட்சிகளை ஒரு படி மேல உயர்த்திகிறது. சண்டை காட்சிகள் பார்வையாளர்களை மிரட்டிகிறது.
எதிர்பார்ப்பு
மொத்தத்தில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது. மேலும், படம் இதுவரை மட்டுமே தமிழகத்தில் சுமார் 25 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.