தமிழ்நாடு

சென்னையில் 6.5 கோடி அபராதம் – காவல்துறை அறிவிப்பு !

சென்னையில் கடந்த 50து நாட்களில் மட்டும் சுமார் 6.5 கோடி ரூபாய் அபராதமாக வசூல் செய்துள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை

சென்னையில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக சாலையில் விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை நிறுத்தி அவர்கள் மீது போலீசார் அபராதம் மற்றும் வழக்கு பதிவு செய்கின்றன. வாகன ஓட்டிகள் அபராதத்தை ஆன்லைன் மூலமாக செலுத்தி வருகின்றனர். மேலும், ஏ.என்.பி.ஆர் போன்ற சிசிடிவியை பயன்படுத்தி போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகனத்தின் நம்பர் பிளேட்டை ஆய்வு செய்யப்படுகிறது. பின்னர் வாகன ஓட்டிகளுக்கு குறுந்செய்தி அனுப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் இது போன்று அனுப்பப்படும் குறுந்செய்தியை பொருட்படுத்தாமல் வாகன ஓட்டிகள் இருந்து வந்தனர். இந்நிலையில், இதுபோன்ற அபராதம் செலுத்தப்படாத நபர்களை தொடர்புகொள்ள தனியார் தொடர்பு மையங்ககளில் மூலமாக நடவடிக்கை எடுத்து வந்தனர்.

traffic police

காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு

கடந்த 2018 மார்ச் மாதம் முதல் கட்டணமில்லா பரிவர்த்தனை முறையில் விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் அபராதத்தை செலுத்தி வந்தனர். ஆனால் காலப்போக்கில் அபராதம் செலுத்துவது குறைந்து வந்தது. இந்த நிலையை சரிசெய்ய சென்னை போக்குவரத்து காவல்துறையினர் அழைப்பு மையங்களை அறிமுகப்படுத்த முடிவு செய்தனர்.

அதன்படி, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர்ஜிவால் கடந்த 11.04.2022 அன்று 10 அழைப்பு மையங்களும், போக்குவரத்து கண்காணிப்பு கேமரா கூடிய 2 அழைப்பு மையங்களை திறந்து வைத்தார். இந்த 12 காவல் அழைப்பு மையங்களும் செயல்பட்டு விதிமீறிய வாகன ஓட்டிகளுக்கு தொலைபேசி முலமாக ஒரு வாரக்காலத்திற்குள் அபராதத்தை செலுத்துமாறும், தவறும் பட்சத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் அறிவுறுத்தினர். 11.04.2022 அன்று முதல் 31.05.2022 வரையிலான அபராதம் வசூலிக்கப்பட்ட விவரங்களை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ளது.

அபராத விவரங்கள்

இந்த முயற்சியின் காரணமாக கடந்த 50 நாட்களில்‌ 1,27,066 பழைய வழக்குகளுக்கான (மார்ச்‌ 2019 முதல்‌ பதியப்பட்ட பழைய வழக்குகள்‌) அபராதத்‌ தொகை ரூ. 1,93,75,970/- விதிமீறிய வாகன ஓட்டிகளிடமிருந்து வசூலிக்கப்பட்டது. இதில் 64 நபர் மீது 100 வழக்குகளும், ஒருவர் மீது 274 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

fine fee collection

ஆறரை கோடி அபராதம்

இதில் ஒரு பகுதியாக, பழைய வழக்கான குடிபோதையில்‌ வாகனம்‌ ஓட்டிய 1,181 வாகன ஓட்டிகளிடம்‌ இருந்து ரூ.1,19,12,000/- அபராதமாக வசூலிக்கப்பட்‌டது. இதில்‌ பெரும்பாலனோர்‌ சராசரியாக ரூ.10,000/- அபராதம்‌ செலுத்தியுள்ளனர். மொத்தம்‌ 1,28,247 பழைய வழக்குகளில்‌ ரூபாய்‌ 3,12,87,920/-அபராதமாக வசூலிக்கப்பட்டது. இது மட்டுமில்லாமல்‌ புதிய வழக்குகளுக்காக ரூ.3,37,34,800/- அபராதமாக வசூலிக்கப்பட்டது. மொத்தமாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்‌துறைனர் இந்த 50 நாட்களில்‌ 2,73,284 வழக்குகளில்‌ ரூபாய்‌ 6,50,22,770/- அபராத தொகையை வசூலித்தது.

காவல்துறை அறிவுறுத்தல்

அபராதம் செலுத்துவதற்காக எஸ்.எம.எஸ் அமைப்பு மையங்கள், கட்டண வசதி மையம் மற்றும் ஆன்லைன் தளங்களை உருவாக்க சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.மேலும், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தின் மீது எதாவது வழக்கு இருக்கிறதா ? என்று ஆன்லைனில் சரிபார்த்து, அபராத தொகையை செலுத்துமாறு சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts