இந்தியா பாதுக்காப்பு துறையில் நான்கு ஆண்டுகள் மட்டும் பணி என்ற அக்னிபத் திட்டத்தை கைவிடக்கோரி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போராட்டத்தை அறிவித்துள்ளார்.
அக்னிபத் திட்டம்
இந்தியா பாதுகாப்பு துறையில் நான்கு ஆண்டு காலத்திற்க்கு மட்டும் இளைஞர்கள் பணியாற்றும் ‘அக்னிபத்’ என்ற திட்டத்திற்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தில் பணியமர்த்தப்படும் இளைஞர்கள் அக்னிவீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள். நான்கு ஆண்டு காலம் முடிவுற்ற பின்பு ராணுவப் பதவியில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம். இதில், இந்திய அளவில் சுமார் 25 சதவீத அக்னிவீரர்கள் ராணுவத்தில் பணியமர்த்தப்படுவார்கள். இந்தத் திட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இளைஞர்கள் போராட்டம்
இந்த திட்டத்துக்கு எதிராக இளைஞர்கள் பெருமளவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, பீகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி அப்போராட்டம் வன்முறைக்களமாகவும் மாறியுள்ளது. தமிழ்நாட்டிலும் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக இளைஞர்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
‘அக்னிபத் திட்டம்’ தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியுள்ளார். அறிக்கையில், ‘ அக்னிபத் திட்டத்திற்கு எதிராக தமிழ்நாட்டில் போராடி வரும் இளைஞர்களின் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி முழுமையான ஆதரவை அளிக்கிறது. இளைஞர்களின் கோரிக்கை ஞாயமானது, தார்மீகமானது. அவர்களது போராட்டக் கோரிக்கை வெல்ல வாழ்த்துகிறேன், அவர்களுக்குத் துணைநிற்கிறேன். அதே கோரிக்கையை முன்வைத்து, நாம் தமிழர் கட்சியும் எழுச்சிமிகுப் போராட்டங்களை மாநில முழுவதும் முன்னெடுக்கும் எனப் பேரறிவிப்பு செய்கிறேன்.
போராட்ட அனுமதி
மேலும், ‘அக்னிபத்’ திட்டத்துக்கு எதிரான நிலைப்பாட்டை முன்வைத்திருக்கிற திமுக அரசு, அதே கோரிக்கையை முன்வைத்து போராடும் இளைஞர்கள் மீது வழக்குகளைத் தொடுக்கும் கொடுங்கோல் போக்கைக் கைவிட வேண்டும். இளைஞர்களின் அறவழிப்போராட்டங்களை அனுமதிக்க வேண்டும்’ என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
போராட்டம் அறிவிப்பு
இதனையடுத்து, ‘ஆறு தமிழர்கள் விடுதலை வலியுறுத்தியும், ‘அக்னிபத்’ திட்டத்தை கைவிட கோரியும், போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்ட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஜூலை 3ம் தேதி கண்டன போராட்டம் நடைபெறும்’ என நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
#அக்னிபத் திட்டத்துக்கெதிராக தமிழகத்தில் போராடி வரும் இளைஞர்களின் அறப்போராட்டத்தை #நாம்தமிழர்கட்சி முழுமையாக ஆதரிக்கிறது.
“அவர்களது கோரிக்கை மிக நியாயமானது; தார்மீகமானது. அவர்களுக்குத் துணைநிற்கிறேன்!”
– #சீமான்https://t.co/Kjb0RshSIl#AgnipathScheme | #AgnipathProtests pic.twitter.com/eaZGwqbXPy
— நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi (@NaamTamilarOrg) June 21, 2022