உலகம்சமூகம்

பிஞ்சி குழந்தையின் தலை துண்டிக்கப்பட்டது ! தாயின் வயிற்றிலே குழந்தையின் தலை வைத்து ஆப்ரேஷன் !

பிரசவத்திற்காக ஆரம்பச் சுகாதார மையத்திற்குச் சென்ற பெண்ணுக்கு நடந்த கொடூரம். பிஞ்சி குழந்தையின் தலை துண்டிக்கப்பட்ட நிலையில், அந்த தலையை தாயின் வயிற்றலே வைத்து ஆப்ரேஷன் செய்த செவிலியர்கள்.

மருத்துவத்துறை

கொரோனா தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வர பல்லாயிரக்கணக்கான மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவமனை ஊழியர்கள் என பல நபர்களின் முயற்சியால் தான் சாத்தியமானது. இந்த முயற்சியில் பல மருத்துவர்கள், செவிலியர்கள் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்துள்ளனர். இதனால் உலக நாடுகளில் உள்ள அனைத்து மக்களுக்குமே மருத்துவர்கள் மீதும் செவிலியர்கள் மீதும் மிகுந்த மரியாதை ஏற்பட்டுள்ளது. ஆனால் தற்போது நடந்த ஒரு சம்பவம் மொத்த மருத்துவத்துறை மீது ஒரு கலங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Pakistan

பிரசவ வலி

பாகிஸ்தான் நாட்டில் தார்பார்கர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அப்பெண்ணை உறவினர்கள் தனது பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கு மகப்பேறு மருத்துவர் அந்த நேரத்தில் அங்கு இல்லை. அதனால் அனுபவமற்ற சில செவிலியர்கள் அப்பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளனர்.

Women

தலை துண்டிப்பு

அப்போது ஆப்ரேஷன்போது வயிற்றில் இருந்த பிஞ்சி குழந்தையின் தலை எதிர்பாராத விதமாகத் துண்டிக்கப்பட்டு உடல் மட்டும் தனியே வந்துள்ளது. இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த செவிலியர்கள் அதிர்ந்து போய் உள்ளனர். மேலும், அந்த குழந்தையின் தலையை வயிற்றில் இருந்து தலையை எடுக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அந்த முயற்சி கைகொடுக்கவில்லை. எனவே அந்த பிஞ்சி குழந்தையின் தலையை  தாயின் வயிற்றுலேயே வைத்து தைத்துள்ளனர்.

Baby Leg

இந்த சம்பவத்தினால் அப்பெண் உடல்நிலை குன்றிவிட்டது. அதனால் அந்தப்பெண்ணை அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு போயுள்ளனர். ஆனால் அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்க வசதிகள் இல்லை. உடனே அப்பெண் லியாகத் மருத்துவ பல்கலைக்கழகத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.

பெண் குழந்தை

லியாகத் மருத்துவ பல்கலைக்கழகத்தில் குழந்தையின் மீதமுள்ள பகுதிகளை தாயின் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்டது. அப்பெண்ணின் உயிர் சரியான நேரத்தில் காப்பாற்றப்பட்டது. இதை பற்றி அப்பெண்ணின் உறவினர் தெரிவித்தபோது, ‘குழந்தையின் தலை உள்ளே சிக்கிக் கொண்டது. தாயின் கருப்பை சிதையும் நிலை ஏற்பட்டுவிட்டது. எனவே அறுவை சிகிச்சை மூலம் தான் குழந்தையின் தலையை வெளியே எடுக்கப்பட்டது’ என்றார். மேலும், அந்த பிஞ்சி குழந்தை பெண் குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

நடவடிக்கை

இச்சம்பவம் தொடர்பாக அந்நாடு சுகாதாரத் துறை இயக்குநர் ஜெனரல் டாக்டர் ஜுமான் பஹோடோ விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். அதிலும் அந்த ஆரம்பச் சுகாதார மையத்தில் பெண் மருத்துவர்கள் இல்லாதது ஏன் என்பது குறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts