சமூகம்தமிழ்நாடு

டிரைவர் கல்லால் அடித்து கொலை – ஓமலூர் அருகே பரபரப்பு !

சேலம் மாவட்டம் ஓமலூரில் அருகே டெம்போ டிரைவர் கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம்

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் உமகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார்(43). இவருக்கு சங்கீதா(30) என்ற மனைவியும், தேவராஜ்(14) என்ற மகனும் உள்ளனர். கணவன் – மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு 10 ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
செந்தில்குமார் செம்மாண்டபட்டி ஊராட்சியில் காளியம்மன் கோவில் தெருவில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். அப்பகுதியில் டெம்போ ஓட்டுனராக வேலை செய்து வந்தார்.

omalur junction
omalur junction
டிரைவர் கொலை

இந்நிலையில், காலை அவரது வீடு திறக்கப்படாமல் இருந்ததால் அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது தலையில் பலத்து காயத்துடன் செந்தில்குமார் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இது குறித்து ஓமலூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன்பிறகு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், ஓமலூர் கூடுதல் பொறுப்பு டி.எஸ்.பி முருகன் மற்றும் ஓமலூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் இந்திராணி ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து மோப்பநாய் மற்றும் தடையவியில் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது. தடையவியில் நிபுணர்களால் கைரேகை பதிவு செய்யப்பட்டது.

police investigation
police investigation
விசாரணை

பின்னர் உடலை மீட்டு பிரேதபரிசோதனைகாக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்படாதா ? அல்லது குடிபோதையில் சீட்டு விளையாடும்போது ஏற்பட்ட தகராறில் கொலை நடந்ததா ? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தில் வருகின்றனர். இரவு நேரத்தில் வீட்டில் நண்பர்களுடன் சீட்டு விளையாடுவது, மது அருந்துவது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனால் சேலம் மாவட்டம் ஓமலூரில் அருகே டெம்ப்போ டிரைவர் கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் சுற்றுவட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts