புதிய குடியரசு தலைவருக்கான தேர்தலின் தேதி குறித்த அறிவிப்பை இன்று வெளியிடுகிறது தேர்தல் ஆணையம்.
ராம்நாத் கோவிந்த்
பாஜக கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு சுமார் 20,930 வாக்குகள் பெற்றார் ராம்நாத் கோவிந்த். இதனால் 2017ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி இந்திய குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார். கடந்த ஐந்து ஆண்டு காலங்களாக இந்திய குடியரசுத் தலைவராக பதவி வகித்து வந்தார் ராம்நாத். இதனிடையே வரும் ஜுலை 24ஆம் தேதியுடன் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடைகிறது.
புதிய குடியரசுத் தலைவர்
அதற்கு முன்பு புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்து பதவியேற்க வேண்டும். இதனால் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கிறது. இந்தியாவில் குடியரசு தலைவரை மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்து வருகிறார்கள் என்பது கூறிப்பிடத்தக்கது.
காட்சிகள் ஆலோசனை
இதனால் காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தங்களது சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பதை குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. இதனால் காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தங்களது சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பதை குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. இதனால் மத்திய அரசு பாஜக கூட்டணி தரப்பில் யாரை வேட்பாளராக நிறுத்தும் என்ற எதிர்பார்ப்பு எழ தொடங்கியிருக்கிறது.
வெங்கையா நாயுடு
மேலும், தற்போது துணை குடியரசுத் தலைவராக பதவி வகித்து வரும் வெங்கையா நாயுடுவுக்கு குடியரசு தலைவர் வாய்ப்பு வழங்கப்படுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு தான் என்று கூறப்படுகிறது. தற்போதைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் புதிய குடியரசு தலைவர் வேட்பாளரை பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவருக்கு பாஜக கூட்டணி வாய்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் அறிவிப்பு
இந்நிலையில், இன்று மாலை நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் இந்திய தேர்தல் ஆணையம் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படவுள்ளது.
கடந்த 10ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெற்று 57 புதிய மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து அனைத்து மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்க உள்ளனர்.