இந்தியா

ரூபாய் 50,000 கேட்ட அரசு ஊழியர்; தெரு தெருவாக பிச்சை எடுத்த பெற்றோர்!

பீகாரில் இறந்த மகனின் உடலை வாங்க அரசு ஊழியர் ரூபாய் 50,000 கையூட்டாக கேட்டதால், இறந்தவரின் பெற்றோர் தெரு தெருவாக சென்று பிச்சை எடுத்த அவல சம்பவம் அரங்கேறியுள்ளது.

காணாமல் போன மகனின் இறப்பு

பீகார் மாநிலத்தின் சமஸ்டிபூரை சேர்ந்தவர் மகேஷ் தாகூர். இவரது மகன் கடந்த சில நாட்களாக காணாமல் போனதாக கூறப்படுகிறது. காணாமல் போன மகனை பெற்றோர் நெடுநாளாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில், மகேஷ் தாகூரின் மகன் இறந்து போனதாகவும், இறந்த மகனின் உடல் சர்தார் அரசு மருத்துவமனையில் இருப்பதாகவும் பெற்றோருக்கு தகவல் கிடைத்துள்ளது. கிடைத்த தகவலை அடுத்து  மகேஷ் தாகூர் மற்றும் இவரது மனைவி இருவரும் சர்தார் அரசு மருத்துவமனைக்கு சென்று இறந்த மகனின் உடலை கேட்டுள்ளனர்.

magesh takur
50,000 கையூட்டு

மகனின் உடலை கேட்ட பெற்றோரிடம் மருத்துவமனை அரசு ஊழியர்கள் முறையாக பதிலளிக்காமல் இறந்த மகனின் உடலை பெற வேண்டுமானால் ரூபாய் 50, 000 கையூட்டு கொடுக்குமாறு கேட்டதாக கூறப்படுகிறது. ‘நாங்கள் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள்.  50,000 என்பது எங்களுக்கு மிகவும் பெரிய தொகை. இவ்வளவு பெரிய தொகையை எங்களால் திரட்ட முடியாது என மகேஷ் தாகூர் கூறியும் அரசு மருத்துவமனை ஊழியர்கள் இவர் கூறுவதை மறுத்து, கையூட்டு பெறுவதிலேயே குறியாக இருந்ததாக கூறப்படுகிறது.

பிச்சை எடுக்கிறேன்

காணாமல் போய், இறந்த நிலையில் கிடைத்த மகனின் உடலை மருத்துவமணையில் இருந்து பெற போதிய பணமில்லாத ஏழை பெற்றோர் அரசு ஊழியர் கேட்ட 50,000 கையூட்டுக்காக பிச்சை எடுக்க முடிவு செய்து, மகேஷ் தாகூர் தனது மனைவியுடன் சேர்ந்து தெரு தெருவாக சென்று பிச்சை எடுத்திருக்கிறார். ‘காணாமல்போன எனது மகன் இறந்துபோனதாகவும் உடல் சர்தார் அரசு மருத்துவமனையில் உள்ளதாகவும் போன் வந்தது. மருத்துவமனை ஊழியர் 50,000 கொடுத்தால் உடலை தருகிறேன் என கூறினார். அவ்வளவு பணம் எங்களால் திரட்டமுடியாததால் பிச்சை எடுக்கிறேன்’ என தாகூர் தெரிவித்துள்ளார்.

Magesh Takur
தவறான புரிதல்

இது சம்பந்தமான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவலாகி பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியதை தொடர்ந்து, டாக்டர் சவுத்ரி ‘இது குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணை மேற்கொள்ளப்படும்’ என கூறினார். மாவட்ட கூடுதல் கலெக்ட்டர் விஜய் குமார் ராய் ‘ இது மாவட்ட நிர்வாகத்தின் பெயரை கெடுக்கும் வகையில் பரப்பப்படுகிறது.

இறந்த நபரின் உடல் பிரேத அறையில் உள்ள நிலையில் போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் 72 மணி நேரத்திற்கு பிறகுதான் உடல் கிடைக்கும். இதற்கு முன்பு 50,000 கொடுத்தாலும் உடலை ஒப்படைக்க முடியாது, என்பதை இந்த குடும்பம் தவறாக புரிந்து கொண்டது’ என கலெக்ட்டர் விஜய் குமார் ராய் இந்த குற்றசாட்டை மறுத்துள்ளார்.

மகேஷ் தாகூர் மற்றும் இவரது மனைவி தெரு தெருவாக பிச்சை கேட்கும் வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் பரவி அனைவரையும் சங்கடத்துக்கு உள்ளாகியுள்ளது.

Related posts