தமிழ்நாடு

நான்கரை கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்த திமுக பிரமுகர் – சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு !

நான்கரை கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்த திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட மூன்று பெண்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தீக்குளிக்க முயன்றது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியள்ளது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

தமிழகத்தில் ஓவ்வொரு திங்கள் கிழமையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதன்படி பொது மக்களின் மனுக்கள் மூலமாக குறைகள் தீர்க்கப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்த பார்வதி, அருள்சக்தி, செல்வமணி ஆகிய மூன்று பெண்கள் வந்தனர். மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க ஏராளமானோர் காத்திருந்தன. இந்நிலையில், மூன்று பெண்களும் அவர்கள் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து மூன்று பேரும் தலையில் ஊற்றி ஆட்சியர் அலுவலகத்தின் முன் தீக்குளிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடி வந்து அவர்கள் மீது தண்ணிரை ஊற்றி அவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் நடத்தினர்.

விசாரணை

இதனையடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் கூறும்போது தங்களுக்கு சொந்தமான நான்கரை கோடி மதிப்புள்ள நான்காயிரம் சதுர அடி நிலத்தை திமுகவை சேர்ந்த சீனிவாசன், வழக்கறிஞர் மஞ்சுளா நாராயணன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் ராஜசேகர் உள்ளிட்டவர்கள் நிலத்தை அபகரித்து கொண்டதாக கூறினார்கள்.

திமுக பிரமுகர் கொலை மிரட்டல்

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது தகாத வார்த்தையால் பேசியும் சாதி பெயரை கூறி கொலை மிரட்டல் விடுத்தனர். இதன்பிறகு முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பியும் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் மனு கொடுத்தனர். ஆனால் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காவல்துறையினர் தகாத வார்த்தையில் பேசி நிலத்தை மீட்டு தர முடியாது என மிரட்டியுள்ளனர். மேலும் திமுக பிரமுகர் சீனிவாசன் உங்கள் குடும்பத்தை அழித்து விடுவதாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

போலீசார் நடவடிக்கை

வேறு வழியின்றி அவர்களிடம் சாவதைவிட நாங்களே உயிரை மாய்த்து கொள் தீக்குளிக்க முயன்றோதாக விளக்கமளித்தனர். எங்களுடைய புகாரின் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டுத்தருமாறு கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன் மூன்று பெண்கள் தீக்குளிக்க முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts