கொடைக்கானலில் இந்த ஆண்டு மலர்கண்காட்சி மற்றும் கோடைவிழாக்கான தேதி அறிவிப்பு.
திண்டுக்கல் மாவட்டம், மலைகளின் இளவரசி, கோடை வாசஸ்தலம் என கூறப்படும் கொடைக்கானலில் கோடைவிழா மற்றும் மலர்கண்காட்சி வருகிற 24ம் தேதி தொடங்கி பத்து நாட்களுக்கு நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோடை காலத்தி இங்கு நிலவும் குளிரிந்த வானிலை சூழலை அனுபவிக்க தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் தினசரி வருகை தருவது வழக்கம்.
மலைகளின் இளவரசி
இந்நிலையில், கொடைக்கானல் கோடைவிழா மற்றும் 52-வது மலர்கண்காட்சி பிரையண்ட் பூங்காவில் 24.05.2022 முதல் 29.05.2022 வரை 6 நாட்கள் தோட்டக்கலைத்துறை மூலமாக மலர்கண்காட்சியும், சுற்றலாத்துறை மூலமாக 24.05.2022 முதல் 02.06.2022 வரை பத்து நாட்கள் கோடைவிழாவும் நடத்தப்படவுள்ளது.
நிகழ்ச்சிகள்
இவ்விழாவில் பத்து நாட்களுக்கும் பல்வேறு பாரம்பரிய மற்றும் கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய வீர விளையாட்டுகள், நாய் கண்காட்சி, மீன் பிடி திருவிழா, படகு அலங்கார அணிவகுப்பு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
மலர்கண்காட்சி
கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கோடைவிழா நடதப்படவில்லை. இந்நிலையில் நடைபெறவுள்ள மலர்கண்காட்சியை காண சுற்றுலா பயணிகள் ஆர்வமாக உள்ளனர். மலர்கண்காட்சில் பல விதமாக பூக்களை கொண்டு விலங்கு உருவங்கள் மற்றும் பழ வகை உருவங்கள் என மலர்கண்காட்சியில்
அலங்கரித்து வைக்கபட்டிருக்கும்.
மேலும் இரண்டு நாட்கள் மட்டும் பிரையண்ட் பூங்கா நடைபெறும் மலர்கண்காட்சி முதல் முறையாக 6 நாட்கள் நடைபெறுவது பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.