சினிமாவெள்ளித்திரை

கவுதம் மேனன் ரசிகர்களுக்கு விடுத்த கோரிக்கை!

வெந்து தணிந்தது காடு படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு இயக்குனர் கவுதம் மேனன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கோரிக்கை

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’ இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இதனால் வெந்து தணிந்தது காடு படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் சித்தி இத்தானி கதாநாயகியாக நடிக்க, ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழகம் முழுவதும் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் காலை 5 மணி காட்சியை பார்க்க வரும் ரசிகர்கள் இரவு நன்றாக தூங்கிவிட்டு வரவும். ஏனென்றால் கதாபாத்திரத்தின் ஓட்டம் செட் ஆக கொஞ்சம் நேரம் எடுக்கும்’ என்று கூறியுள்ளார்.

Related posts