அரசியல்இந்தியா

அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மும்பை பயணம் – ஏக்நாத் ஷிண்டே !

தன்னுடன் இருக்கும் 50 எம்.எல்.ஏ.க்களுடன் விரைவில் மும்பை செல்லவிருப்பதாக சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.

அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்

மகாராஷ்டிராவின் அரசியல் குழப்பம் இப்போது உச்சத்தை தொட்டுள்ளது. சிவசேனா கட்சியின் மூத்த நிர்வாகியான ஏக்நாத் ஷிண்டே, கட்சித் தலைமை மீது கொண்ட அதிருப்தியால், தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் குஜராத் மாநிலம் கவுஹாத்தியில் தங்கியுள்ளார். ஷிண்டேவுக்கு நாளுக்கு நாள் ஆதரவாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு போகிறது. இதனால் ஆளும் கட்சியான சிவசேனா கூட்டணி அரசு கவிழும் நிலைக்கு வந்துள்ளது.

அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்

உச்சநீதிமன்றம் உத்தரவு

இந்நிலையில், உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு, 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய துணை சபாநாயகர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது , இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தை ஷிண்டே நாடினார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்வதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு ஜூலை 11 மாலை வரை காலக்கெடு வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சரவை கூட்டம்

இதனிடையே கவுகாத்தியில் இருக்கும் எம்எல்ஏக்களில் சிலர் சிவசேனா தலைமையிடம் தொடர்பில் இருப்பதாக கூறப்பட்டது. அவர்களது பெயர்களை சிவசேனா அறிவிக்க வேண்டும் என்றும் ஏக்நாத் ஷிண்டே கேட்டிருந்தார். இந்த சூழலில், உத்தவ் தாக்கரே தலைமையிலான அமைச்சரவை கூட்டம் மாலை 5 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே

மும்பை பயணம்

இந்த சூழலில் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி விரைவில் உத்தவ் தாக்கரேவை அழைத்து பெரும்பான்மையை நிரூபிக்க கோரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தன்னுடன் 50 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாக ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார். மேலும் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் கவுஹாத்தியிலிருந்து மும்பை செல்கிறார் ஷிண்டே. அங்கு மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts