இனி தனது அறக்கட்டளைக்கு யாரும் நன்கொடை வழங்க வேண்டாம் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவு
ராகவா லாரன்ஸ் கைவண்ணம் தற்போது ‘ருத்ரன்’, ‘சந்திரமுகி 2’, ‘அதிகாரம்’, ‘துர்கா’ ஆகிய படங்கள் உள்ளது. இதில் ‘சந்திரமுகி 2’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து இரண்டாம்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இதற்காக நடிகர் ராகவா லாரன்ஸ் தனது உடலை மெருகேற்றி வருகிறார். இந்நிலயில், தனது அறக்கட்டளை குறித்து ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கதில் பதிவித்துள்ளார். அதில், அனைவருக்கும் வணக்கம், சந்திரமுகி 2 படத்திற்காக எனது உடலை மாற்றுவதற்கு நான் எடுக்கும் ஒரு சிறிய முயற்சியைப் பகிர்ந்து கொள்கிறேன். என் மாற்றத்திற்கு காரணமான எனது பயிற்சியாளர் சிவா மாஸ்டருக்கு நன்றி.
வேண்டுகோள்
மேலும், இத்தனை ஆண்டுகளாக என்னுடைய (Larencce Charitable trust) அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இப்போது, நான் நல்ல இடத்தில் இருக்கிறேன், பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகி வருகிறேன் அதனால் சேவை செய்யும் முழுப் பொறுப்பையும் நானே ஏற்கவுள்ளேன். எனவே, எனது அறக்கட்டளைக்கு யாரும் நன்கொடையாக வழங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Hi everyone! I want to share a small update about Chandramukhi 2 and my trust! pic.twitter.com/jLPrVm7q3N
— Raghava Lawrence (@offl_Lawrence) September 13, 2022