புரட்டாசி மாதம் பிறப்பதை முன்னிட்டு வரும் 18-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது.
நடை திறப்பு
தமிழ் மாத தொடக்கத்தின் போது சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் வரும் 18-ம் தேதி புரட்டாசி மாதம் தொடங்குவதை முன்னிட்டு 16-ம் தேதி மாலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும், 18-ம் தேதி புரட்டாசி மாதப்பிறப்பையொட்டி வரும் 18-ம் தேதி அன்று சபரிமலை கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. சபரிமலை கோவிலுக்கு இந்த மாதம் முதல் ஆன்லைன் முன்பதிவு செயல்படுத்தப்படவுள்ளது.
இதற்கான தொழில்நுட்ப ஆதரவை வழங்க தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

