இந்தியாசமூகம்

ஹிந்தி மொழி தினத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து !

ஆண்டு தோறும் செப்டம்பர் 14-ம் தேதி ஹிந்தி தினம் கொண்டாடப்படுவது வழக்கம்.

பிரதமர் வாழ்த்து

அந்தவகையில் இன்று கொண்டாடப்பட்டு வரும் ஹிந்தி மொழி தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, உலகெங்கிலும் ஹிந்தி மொழி இந்தியாவிற்கு ஒரு சிறப்பு மரியாதையை கொண்டு வந்துள்ளது. அதன் எளிமை, தன்னிச்சையான தன்மை மற்றும் உணர்திறன் எப்போதும் ஈர்க்கிறது.

மேலும், நாட்டின் மிகப்பெரிய பேசும் மொழியை வலுப்படுத்த அயராது முயற்சிகளை மேற்கொண்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts