உலகம்சமூகம்

ஜனாதிபதி திரவுபதி முர்மு லண்டன் பயணம்!

எலிசபெத் ராணியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு மூன்று நாள் பயணமாக லண்டன் செல்கிறார்.

உயிரிழப்பு 

பிரிட்டன் மகாராணி எலிசபெத் உடல்நல குறைவு காரணமாக கடந்த 8ம் தேதி காலமானார். முதலில் அவர் உடல் ஸ்காட்லாந்தின் தலைநகரான எடின்பரோ நகரில் உள்ள ஹோலிரூட் ஹவுஸ் மாளிகையில் கடந்த 11ம் தேதி வைக்கப்பட்டது. அங்கு அரச குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரின் உடல் செயிண்ட் கில்ஸ் தேவாலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து இன்று எலிசபெத் ராணியின் உடல் லண்டன் சென்றடைந்துள்ளது.

இறுதிச்சடங்கு 

இந்நிலையில், ராணி எலிசபெத் இறுதிச்சடங்கில் பங்கேற்க இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு வரும் 17-ம் தேதி லண்டன் செல்கிறார். மேலும், அவர் வரும் 19-ம் தேதி ராணியின் இறுதிச்சடங்கை முடித்துக்கொண்டு இந்தியா திரும்புகிறார்.

 

Related posts