மாரி இரண்டாம் பாகம் படத்தில் இடம் பெற்ற பாடல் ரவுடி பேபி. இது யூடியூபில் பல கோடி பார்வையாளர்களை பெற்று புதிய சாதனை படைத்தது. இந்நிலையில் தற்போது இந்த பாடல் யூடியூபில் முடக்கப்பட்டுள்ளது.
மாரி படம்
தனுஷ் நடிப்பில், பாலாஜி மோகன் இயக்கத்தில் 2015ம் ஆண்டு வெளியான படம் மாரி. காஜல் அகர்வால், ரோபோ சங்கர் ஆகியோர் நடித்திருந்த இந்த படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றது. மேலும், அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட் ஆனது. குறிப்பாக தனுஷ் எழுதியிருந்த ‘டான்-னு டான்-னு டான்-னு’ என்ற பாடல் பட்டித்தொட்டி எங்கும் பரவியது. படமும் திரையரங்கில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது.
ரவுடி பேபி
இந்நிலையில், படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. இந்த படத்தையும் பாலாஜி மோகன் இயக்க தனுஷ், சாய் பல்லவி ரோபோ சங்கர், அறந்தாங்கி நிஷா ஆகியோர் நடித்திருந்தார்கள். முதல் பாகத்தின் அனிருத் இசையில் பாடல்கள் வெற்றியடைந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இந்த படத்தின் பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. குறிப்பாக ‘ரவுடி பேபி’ என்ற பாடல் அனைவரையும் முனுமுனுக்க வைத்தது.
புதிய சாதனை
மேலும், இந்த பாடல் சமூகவலைதளமான யூடியூபில் வெளியாகி 17 நாட்களில் 10 கோடி பார்வையாளர்களை பெற்றது. இதனால் அதிக பார்வையாளர்களை பெற்ற முதல் தமிழ்ப்பாடல் என்ற பெயரை பெற்ற ‘ஒய் திஸ் கொலைவெறி டி’ பாடலின் சாதனையை முறியடித்தது. பல வருடங்களாக இப்பாடலே சாதனையில் இருந்த நிலையில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் படத்தின் இடம்பெற்ற அரபிக் குத்து இந்த சாதனையை முறியடித்தது.
முடக்கம்
இந்நிலையில் தற்போது ரவுடிபேபி பாடல் யூடியூபில் முடக்கப்பட்டுள்ளது. மேலும், எதிர்நீச்சல், காக்க முட்டை, நானும் ரவுடி தான், வேலையில்லா பட்டதாரி, காக்கி சட்டை, மாரி போன்ற படங்களை தயாரித்த நடிகர் தனுஷின் வுண்டர்பார் நிறுவனத்தின் யூடியூப் சேனலும் முடக்கப்பட்டுள்ளது. மேலும், ஹேக்கர்ஸ் இதை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்க படுகிறது.
பலருக்கும் பிடித்தமான பாடலான ரவுடி பேபி திடீரென முடிங்கியதால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் உள்ளனர்.