தொழில்நுட்பம் நாளுக்கு நாள் முன்னேறி வருகிறது. “செல்போன்” “தொலைக்காட்சி” “இன்டர்நெட்” “ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்” என நீண்டுகொண்டே இருக்கிறது.
இப்போது மிகப்பெரிய புரட்சியாக “மனிதனின் மூளையில் நினைப்பதை அறிந்து அதற்கேற்றவாறு செயல்படக்கூடிய அப்பிளிக்கேஷன் தயாரிப்பதில் முற்பட்டிருக்கிறது மைக்ரோசாப்ட் நிறுவனம்.
இது சாத்தியமா என நீங்கள் நினைக்கலாம் அல்லது நம்பாமலும் இருக்கலாம். ஆனால் இதற்கான வேலைகள் துவங்கிவிட்டன. விரைவில் அந்த தொழில்நுட்பத்தையும் நாம் பயன்படுத்தத்தான் போகிறோம்.
மனித மூளைக்குள் நியூரான்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே. அந்த நியூரான்கள் ஒவ்வொன்றும் தங்களுக்கு இடையே மின்னனு வடிவில் செய்திகளை பரிமாறிக்கொள்கின்றன.
அந்த மின்னனு ஆற்றலை ஒருங்கிணைத்துதான் EEG தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி “Graph” வடிவில் திரையில் பார்க்கிறோம்.
அதனை பதிவு செய்து வைத்து மூளையில் ஏற்படும் மாற்றங்களையும் குறைகளையும் மருத்துவர்களால் கண்டறிய முடிகிறது.
மூளையில் நியூரான்கள் பகிர்ந்துகொள்ளும் மின்னனு வடிவிலான செய்திகளை (ஆற்றலை) பிடித்து வரைபடமாக பார்க்க முடியும் போது அதிலிருந்து தகவலை ஏன் பெற முடியாது? இதுதான் புதிய கண்டுபிடிப்பின் தொடக்கம்.
மனிதனால் அந்த வரைபடத்தை வைத்துக்கொண்டு தகவலாக மாற்றுவது என்பது இயலாத காரியம், ஆனால் திறன்மிக்க கணினியால் அது நிச்சயமாக முடியும்.
மைக்ரோசாப்ட் வடிவமைப்பின்படி, தலையில் “Head band” என்ற கருவியை மாட்டிக்கொள்ளவேண்டி இருக்கும். அந்த Head band உங்களது மூளையில் இருந்து வருகின்ற தகவலை சேகரித்து தகவலாக மாற்றக்கூடிய பணியினை செய்யும்.
அந்த கருவியோடு இணைந்திருக்கும் மொபைலில் இருக்கும் ஆப் அல்லது பிரவுசரில் வீடியோ play ஆவது scroll செய்வது போன்ற பல விசயங்களை செய்திட முடியும்.
மறைந்திருக்கும் ஆபத்து :
இப்போது வெறுமனே ஆப் அல்லது பிரவுசரை இயக்கவே மூளையில் இருந்து பெறப்படும் தகவலை படிக்கிறார்கள். நாளடைவில் மனிதன் என்ன நினைக்கிறான் என்பதனையும் நம்முடைய அனுமதி இல்லாமலே கூட இந்த கணினிகளால் தெரிந்து கொள்ள இயலும்.
நம்முடைய எண்ணத்தை ஒரு கணினி படிப்பது என்பது தொழில்நுட்பத்தின் முன்னேற்றமாக இருக்கலாம். ஆனால் ஒருவர் என்ன நினைக்கிறார் என்பதனை ஒரு மெஷின் மூலமாக கண்டறிந்துவிடலாம் என்றால் ரகசியங்கள் என்னாகும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.
அந்த தகவல் யாரால் எப்படி பயன்படுத்தப்படும் என்பதும் மிகப்பெரிய கேள்விக்குறி. தொழில்நுட்பத்தின் வருகையை நம்மால் தடுக்க இயலாது ஆனால் பயன்பாட்டில் வரையறை செய்துகொள்ளமுடியும்.