தமிழ்நாடு

ஷவர்மாவுக்கு தடையில்லை, இறைச்சி தரமாக இருக்க வேண்டும்; அமைச்சர் விளக்கம்!

தமிழகத்தில் ஷவர்மா விற்பனைக்கு தடையில்லை. எனினும், ஷவர்மா கடைகளில் பயன்படுத்தப்படும் இறைச்சி சரியானதாக இருக்க வேண்டும் என மக்கள் நலத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

கேரள சம்பவம்

கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரள மாநிலம் கேசர்கோடு அருகேயுள்ள செருவத்தூரில் உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்டு 15 மாணவிகள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். இதில் ஒரு மாணவி இறந்தே விட்டார். ஷவர்மாவில் பயன்படுத்திய இறைச்சி முறையாக சமைக்கப்படாததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் கேரள மாநிலம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வெளிநாட்டு உணவு

கேரளாவில் நடந்த ஷவர்மா சம்பவம் குறித்து தமிழகத்தில் உள்ள ஷவர்மா கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதனையடுத்து சில தினங்களுக்கு முன்பு செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியம் அவர்கள் ஷவர்மா வெளிநாட்டு உணவு என்றும் இந்த உணவு வெளிநாட்டு மேற்கத்திய தட்வெப்ப நிலைக்கு கெடாமல் இருக்கும் என்றும், தமிழ்நாட்டில் ஷவர்மா விற்பனைக்கு தடை விதிக்க விதிக்கபடும் எனவும் கூறியதாக தகவல் பரவியது.

ஆலோசனை கூட்டம்

பின்னர் இது தொடர்பாக மக்கள் நலத்துறை அமைச்சர் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் மருத்துவ மற்றும் மக்கள்நல துறை சார்பில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர்களுக்கு ஆலோசனை நடைபெற்றது. மருத்துவ மற்றும் மக்கள் நலத்துறை அமைச்சர் மா சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கலப்படத்தை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

530 ஷவர்மா கடைகள்

அப்போது மருத்துவ மற்றும் மக்கள் நலத்துறை அமைச்சர் மா சுப்ரமணியம் மாநிலங்களில் ஷவர்மா விற்பனைக்கு தடையில்லை. அவை முறையாக சமைத்து இருப்பதை மட்டும் உறுதி செய்ய வேண்டும். தலைநகர் சென்னையில் மட்டும் 530 ஷவர்மா கடைகளை உள்ளன. ஷவர்மா இறைச்சியை பரிசோதனை செய்ய மைக்ரோபல் டெஸ்ட் மேற்கொள்ளப்படும். இதற்காக சுமார் 160ம் மேற்பட்ட கடைகளில் இருந்து இறைச்சி மாதிரி எடுக்கப்பட்டுள்ளன.

அதிகாரிகளுக்கு அறிவுரை

சாலையோரமாக உள்ள ஷவர்மா கடைகளில் இறைச்சியை பதப்படுத்த பிரீசர் இருக்காது என்பதால், அந்த கடைகளில் ஒரு நாளைக்கு தேவையான அளவு இறைச்சியை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும் என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். கேரளாவில் நடந்தது போல் உயிர் சேதம் ஆகாதவாறு தடுப்பு நடவடிக்கைகளை கையெடுக்கும் வண்ணம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனைகளில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது என மருத்துவ மற்றும் மக்கள் நலத்துறை அமைச்சர் மா சுப்ரமணியம் ஆலோசனை கூட்டத்தில் கூறினார்.

Related posts