இந்தியாசமூகம்தமிழ்நாடுபயணம்

மீண்டும் கொரோனா விதிமுறைகள் அமல் – சென்னை விமான நிலையம் அறிவிப்பு !

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சென்னை விமான நிலையத்தில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா அதிகரிப்பு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதிலும் முக்கியமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 476ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், தமிழகத்தில் 3 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் ஒரு கொரோனா உயிரிழப்பு பதிவாகி உள்ளது.

corona

சென்னை விமான நிலையம்

இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு கொரோனா தொற்று பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. விமான நிலையம் வரக்கூடியவர்களுக்கு முக கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பயணிகள் முக கவசம் அணியாமல் இருந்தால் விமானத்தில் ஏற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் அனைத்து பகுதிகளிலும் “நோ மாஸ்க், நோ எண்ட்ரி” என்ற ஸ்டிக்கர்கள் அதிகமாக ஒட்டப்பட்டுள்ளன. முக கவசம் அணிந்தவர்கள் மட்டுமே விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையம்

விதிமுறைகள்

இந்நிலையில், முக கவசம் அணியாமல் வருபவர்களை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் நிறுத்தி கொரோனா விதிகளை சுட்டி காட்டுகின்றனா். முக கவசம் அணிந்து தான் வர வேண்டும் என்று கூறி வருகின்றனர். மாஸ்க் முறையாக அணியாமல் கழுத்தில் தொங்க விட்டு இருப்பவர்களையும் மாஸ்க்கை சரியாக அணியும்படியும் அறிவுறுத்துகின்றனா்.

நடவடிக்கை

மேலும், விமான பயணிகள் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றுகளோடு தான் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். வெளிநாடுகளில் குரங்கு அம்மை பரவல் காரணமாக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பரிசோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

chennai airport

அதிகாரிகள் எச்சரிக்கை

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாமல் விமான நிலையத்திற்கு வருபவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மேலும், மாஸ்க் அணியாமல் விமான நிலையத்திற்குள் வர அனுமதியில்லை என விமான நிலைய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Related posts