அரசியல்தமிழ்நாடு

பாஜகவை பிரதான எதிர்க்கட்சியாக திமுக உருவாக்கிக் கொண்டிருக்கிறது – அண்ணாமலை பேச்சு !

தமிழகத்தில் பாஜகவை பிரதான எதிர்க்கட்சியாக திமுக உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்று அண்ணாமலை ஏற்காட்டில் உள்ள மலைவாழ் மக்கள் சந்திப்பின் போது செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.

சேலம் ஏற்காடு

சேலம் மாவட்டம், ஏற்காடு அடுத்த நாகலூர் கிராமத்தில் உள்ள மலைவாழ் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில துணை தலைவர் கே.பி ராமலிங்கம், கோட்ட பொறுப்பாளர் அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, மலைவாழ் மக்களின் நலனுக்காக பாரத பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பிரதமரின் வனபந்து கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் மலைவாழ் மக்களின் குழந்தைகள் தொடக்க கல்வி படிப்பு முதல் முனைவர் படிப்பு வரை மத்திய அரசு பல்வேறு உதவிகளை செய்துவருகிறது.

மலைவாழ் மக்கள் நலன்
மலைவாழ் மக்கள் நலன்
100 சதவீத நிதி

மலைவாழ் மக்களின் கிராம ஊராட்சிகளில் 100 சதவீத நிதியை மத்திய அரசு வழங்கி வருகிறது. மலைவாழ் மக்களின் மேன்பாட்டுக்காக சுமார் 26 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை ஒதிக்கீடு செய்துள்ளது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, நெல் உள்ளிட்ட 14 வகையான பொருட்களுக்கு மத்திய அரசு ஆதார விலையை கூட்டியுள்ளது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லுக்கு மட்டும் கடந்த 8 வருடத்தில் 58 சதவீதம் விலையை அதிகரித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. ஒவ்வவொரு வருடமும் நெல்லுக்கான விலையை ஏற்றி விவசாயிகளின் பாதுகாவலராக பிரதமர் மோடி விளங்குகிறது என்பது இதிலிருந்து தெளிவாக தெரிகிறது.

விவசாயி
விவசாயி
செய்தியாளர் சந்திப்பு

தொடர்ந்து பேசியவர், தமிழகத்தில் யார் பிரதான எதிர்க்கட்சி என்பது முக்கியம் கிடையாது. இது மக்கள்தான் முடிவு செய்வார்கள். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை பிரதான எதிர்க்கட்சியாக திமுக உருவாக்கிக் கொண்டிருக்கிறது. மக்கள் மத்தியில் உண்மைகளை கொண்டு செல்வதால் பாரதிய ஜனதா கட்சியை வளர்த்து வருகிறார்கள். அதே நேரத்தில் பாஜகவின் நோக்கம் ஆளுங்கட்சியாக ஆக வேண்டும் என்பதுதான். 3 வது கட்சியாக வருவதற்கு யார் வேண்டுமானாலும் சண்டை போட்டுக் கொள்ளலாம். முதல் கட்சியாக வருவதற்கு உழைத்து கொண்டிருக்கிறோம்.

annamalai pressmeet
annamalai pressmeet
நாங்கள் வளர்கிறோம்

கட்சிகளையோ தனிநபரையோ நாங்கள் எதிர்க்கவில்லை, கொள்கையை தான் எதிர்க்கிறோம். மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை. முதல் ஊழல் பட்டியல் வெளியிட்டவுடன் வழக்கு போட்டால் பயந்து விடுவார்கள் என திமுக தப்பு கணக்கு போட்டால் அடுத்த பட்டியல் இதைவிட 10 மடங்கு அதிகமாக வெளியிடுவோம் என ஏற்காட்டில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

Related posts