பிரபல நடிகை பூஜா ஹெக்டே விமான நிலையத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தன்னிடம் தவறான முறையில் நடந்துகொண்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மிஸ் யூனிவெர்ஸ்
2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ‘மிஸ் யூனிவெர்ஸ் இந்தியா’ என்ற அழகு போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தவர். இதனைத்த்தொடர்ந்து தமிழ் சினிமாவில் அறிமுகமான பூஜா ஹெக்டே, பின்னர் தெலுங்கு, ஹிந்தி மொழி திரைப்படங்களில் பணியாற்றி பிரபலமாகியுள்ளார்.
பூஜா ஹெக்டே
2012ம் ஆண்டு வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அந்த படம் தோல்வியை தழுவியதால் அவருக்கு தமிழில் வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால் தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினார் பூஜா. தெலுங்கில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ‘அலா வைகுண்டபுரம் லோ’ படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அந்த படத்தில் இடம்பெற்ற ‘புட்ட பொம்மா’ பாடல் இவரின் புகழை பட்டித்தொட்டி எங்கும் கொண்டு சேர்த்தது.
5 கோடி சம்பளம்
அதற்கு பிறகு கடந்த ஏப்ரல் மாதம் வெளியான பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். மேலும், பீஸ்ட் படத்தில் பூஜாவிற்கும் விஜய்க்கும் இடையிலான காட்சிகளுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. தொடர் வெற்றியினால் பூஜா தற்போது 5 கோடி ரூபாய் வரை சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது. இதனால் தென்னிந்தியாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருக்கிறார் பூஜா ஹெக்டே.
குற்றச்சாட்டு
இந்நிலையில், மும்பையில் இருந்து வந்த தனியார் விமானத்தில் பனிபுரியும் பணியாளர் ஒருவர் தன்னிடம் மிகுந்த திமிரான முறையில் நடந்து கொண்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் ‘இண்டியா கோ விமானத்தின் ஊழியர் விபுல் நகாசே என்பவர், எங்களுடன் தகாத முறையில் நடந்து கொண்டார். அவர் நடந்து கொண்ட விதம் மிகுந்த திமிராக இருந்தது’. இதனைத்தொடர்ந்து எந்த வித காரணமும் இல்லாமல் எங்களிடம் அப்படி நடந்துகொண்டதாக அவர் கூறியிருக்கிறார்.