சமூகம்சினிமாவெள்ளித்திரை

பார்த்திபனுக்கு கேள்விகளை அடுக்கும் புளூ சட்டை மாறன் – பதில் தருவாரா பார்த்திபன் ?

பிரபல திரைப்பட விமர்சகர், இயக்குனரும் நடிகருமான பார்த்திபனிடம் 14 கேள்விகளை கேட்டுள்ளார்.

புளூ சட்டை மாறன்

பார்த்திபன் இயக்கி நடித்திருந்த படம் இரவின் நிழல். உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் திரைப்படம் என்ற பெருமையுடன் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இப்படம் வெளியானது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இருப்பினும் இரவின் நிழல் படத்தை நடிகர் ரஜினி காந்த் உள்பட பலரும் பாராட்டி வந்தனர்.

கேள்விகள்

இதனிடையே இரவின் நிழல் படம் சிங்கிள் ஷாட் நான் லீனியர் படம் இல்லை என்றும் 2013ம் ஆண்டு வெளியான Fish & Cat படம்தான் உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் படம் என்று பிரபல திரைப்பட விமர்சிகர் புளூ சட்டை மாறன் கூறினார். இதற்கு பதிலளித்த பார்த்திபன், Fish & Cat படம் நான் லீனியர் படம் இல்லை என்று கூறினார். இந்நிலையில், புளூ சட்ட மாறன், பார்த்திபனிடம் 14 கேள்விகளை கேட்டுள்ளார்.

Related posts