செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான வரவேற்பு பாடல் வெளியாகியுள்ளது.
செஸ் ஒலிம்பியாட்
தமிழநாட்டில் முதல்முறையாக சர்வதேச அளவில் 44வது ‘செஸ் ஒலிம்பியாட்’ சதுரங்க போட்டி வருகிற 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மாமல்லபுரத்தில் செய்துவருகின்றது. இந்த போட்டியில் 188 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர்கள் பங்கேற்றயுள்ளனர். ‘செஸ் ஒலிம்பியாட்’ போட்டி தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்அரசால் நடத்தப்பட்டு வருகின்றன. சென்னை நேரு உள் விளையாட்டரங்கத்தில் தொடக்க விழா நடைபெறுகிறது. இந்தநிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பதாக தகவல் தெரிவிக்கின்றனர். தற்போது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான வரவேற்பு பாடல் வெளியாகியுள்ளது. செஸ் ஒலிம்பியாட் வரவேற்பு பாடலின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.அதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
#ChessChennai2022 ♟is bringing the world to our Chennai. I am honoured to have had the opportunity of composing the anthem for such a truly international event. https://t.co/0vaJUMRTBB
— A.R.Rahman (@arrahman) July 21, 2022

