ஜனாதிபதி தேர்தல் திரௌபதி முர்மு தொடர்ந்து முன்னிலையில் இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல்
இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகிற 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 18ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இந்த வாக்குகள் எண்ணும் பணியானது இன்று காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் எம்.பி.க்களின் வாக்குகள் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை முடிவடைந்ததும் வேட்பாளர்களின் முன்னணி நிலவரத்தை பி.சி மோடி வெளியிட்டு வருகின்றார். மேலும், தேர்தல் நடத்தும் அதிகாரி பி.சி மோடி வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது 2வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகியுள்ளது. அறிவிப்பின் படி, திரௌபதி முர்மு 4,83,299 வாக்குகளும், யஷ்வந்த் சின்ஹா 1,89,876 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதனால் திரௌபதி முர்மு தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார் என தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளன.

