சினிமாவெள்ளித்திரை

இரவின் நிழல் படத்திற்கு ரஜினிகாந்த் வாழ்த்து !

நடிகர் ரஜினிகாந்த் இரவின் நிழல் படக்குழுவினரை பாராட்டி கடிதம் எழுதியுள்ளார்.

ரஜினி பாராட்டு

பார்த்திபன் இயக்கி நடித்து கடந்த வாரம் திரையரங்கில் வெளியான படம் இரவின் நிழல். உலகின் முதல் நான் லீனியர் சிங்கள் ஷாட் திரைப்படமாக வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இருப்பினும் இந்த படத்தை உருவாக்கிய இயக்குனர் பார்த்திபன் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், ஒளிப்பதிவாளர் ஆர்தர் ஏ வில்சன் ஆகியோருக்கு பாராட்டுக்கள் குவிந்தது.

இந்நிலையில், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி காந்த் இரவின் நிழல் படத்தை பார்த்து பார்த்திபனை அழைத்து பாராட்டியுள்ளார். மேலும், இரவின் நிழல் படக்குழுவினரை வாழ்த்தி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

Related posts