சிகிச்சை முடிந்து இயக்குனர் டி.ராஜேந்தர் நாளை அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்புகிறார் என்று கூறப்படுகிறது.
சென்னை வருகை
இயக்குனர், நடிகர் என்று பன்முகத் திறமை கொண்ட டி.ராஜேந்தர் உடல்நலக்குறைவால் கடந்த மே மாதம் 19ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் மேல்சிகிச்சைக்காக கடந்த மாதம் 14ம் தேதி அமெரிக்கா சென்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜேந்தர் இரண்டு வாரங்கள் அமெரிக்காவில் சிகிச்சை பெற உள்ளதாக கூறினார்.
இந்நிலையில், தற்போது சிகிச்சை முடிந்து டி.ராஜேந்தர் நாளை அதிகாலை 2 மணியளவில் சென்னை வருகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

