ஓட்டப்பிடாரம் வ.உ.சிதம்பரனார் அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார்.
திடீர் ஆய்வு
ஓட்டப்பிடாரத்தில் வ.உ.சிதம்பரனார் அரசு மருத்துவமனையில் நேற்று ஓட்டப்பிடாரம் தொகுதி உறுப்பினர் சண்முகையா எம்.எல்.ஏ திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும், அங்கு சிகிச்சை பெற்று வந்த உள்நோயாளிகள் மற்றும் சிகிச்சைக்கு வந்த வெளி நோயாளியிடம் மருத்துவமனையின் குறைகளை குறித்து கேட்டறிந்தார். மருத்துவரிடம் மருத்துவமனையில் உள்ள நிறை குறைகளை குறித்து கேட்டறிந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஓட்டப்பிடாரம் தொகுதி உறுப்பினர் சண்முகையா எம்.எல்.ஏ கூறுகையில், மருத்துவமனையில் உள்ள குறைபாடுகள் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இரவு நேர பணியில் மருத்துவர்கள் நியமிக்கப்படும் வரை, தற்போது பணியில் உள்ள மருத்துவர்கள் காலை 9 முதல் மாலை 4 மணி வரை பணியில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினேன். மேலும், ஆய்வின் போது அரசு மருத்துவர்கள் ஹேமலதா, தினேஷ், ஐஸ்வர்யா வள்ளி, சித்த மருத்துவர் வசந்தகுமாரி மற்றும் மருத்துவ ஊழியர்கள் உடன் இருந்தனர்.

