ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ஜப்பான் நாட்டில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் ரிலீஸ்
பாகுபலி 2 படத்தை தொடர்ந்து ராஜமௌலி இயக்கிய திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்திருந்த இத்திரைப்படம் கடந்த மார்ச் 24ம் தேதி வெளியானது. பிரம்மாண்ட சண்டைகாட்சி, செண்டிமெண்ட் என்று நிறைந்திருந்த இப்படம் திரையரங்கில் சுமார் 1000 கோடி வரை வசூல் செய்தது. அதனைத்தொடர்ந்து ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் கடந்த மே 20ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியானது.
இந்நிலையில், ஆர்.ஆர்.ஆர் படம் ஜப்பான் திரையரங்குகளில் அக்டோபர் 21ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.