சினிமாவெள்ளித்திரை

அஜித் படத்தில் கவனம் செலுத்தும் விக்னேஷ் சிவன்!

அஜித் படம்

நடிகர் அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘துணிவு’ படத்தில் நடித்துள்ளார். இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுலா இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இதனையடுத்து அஜித்தின் 62 வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வைரல் பதிவு

இந்நிலையில், ஏகே 62 படம் குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘என் அடுத்த பெரிய வாய்ப்பான ‘ஏகே 62′ திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறேன். இந்தப் பெரிய பொறுப்பை அளித்த அஜித் சார் , லைகா தயாரிப்பு நிறுவனத்திற்கு நன்றி. வாழ்வில் சிறிய விஷயங்கள்தான் நம்மை மகிழ்ச்சியாக்குகிறது. அதில் கவனம் செலுத்தி மகிழுங்கள். பெரிய விஷயங்கள் தானாக வந்துவிடும்’ என குறிப்பிட்டுள்ளார்.

Related posts