தி லெஜெண்ட் திரைப்படம் உலகம் முழுவதும் 2,500 திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
தி லெஜெண்ட்
பிரபல தொழிலதிபர் சரவணன் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் தி லெஜெண்ட். ஜேடி – ஜெர்ரி இயக்கியுள்ள இத்திரைப்படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். சண்டைக் காட்சிகள், காதல், செண்டிமெண்ட் என்று உருவாகியிருக்கும் இப்படம் வரும் 28ம்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்பெயரில் தி லெஜெண்ட் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றது.
இந்நிலையில், தி லெஜெண்ட் திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 2500 திரையரங்குகளில் 5 மொழிகளில் வெளியாகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

