சினிமாவெள்ளித்திரை

விஜய் சேதுபதி நிலையை எட்டுவது என்னால் முடியாது – ஹிருத்திக் ரோஷன்!

ஹிருத்திக் ரோஷன்

புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில், கடந்த 2017-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘விக்ரம் வேதா’. சஷிகாந்த் தயாரித்த இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன், மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலி கான் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் நாளை திரையரங்கில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், விக்ரம் வேதா படம் குறித்து நடிகர் ஹிருத்திக் ரோஷன் கூறுகையில், விக்ரம் வேதா படத்தில் விஜய் சேதுபதி அற்புதமாக நடித்திருந்தார். அந்த நிலையை எட்டுவது என்னால் முடியாது’ என்று கூறியுள்ளார்.

Related posts