தமிழ்நாடுமருத்துவம்

பொதுமக்கள் ரத்த தானம் செய்ய வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்!

ஆண்டுதோறும் அக்டோபர் முதல் திங்கள் தேசிய தன்னார்வ ரத்த தான தினமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

ரத்த தானம்

அந்த வகையில் தேசிய தன்னார்வ ரத்த தான தினத்தையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ரத்த தானத்தின் மூலம் மதிப்பிற்குரிய மனித உயிரை காப்பாற்றுவது புனிதமான செயல். இந்த முக்கியத்துவம் வாய்ந்த ரத்த தானத்திற்கான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் தேசிய தன்னார்வ ரத்த தான நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

அறிக்கை 

சுமார் 5 லிட்டர் ரத்தம் வரை ஒவ்வொருவரின் உடலிலும் உள்ளது. அதில் ரத்த தானத்தின் மூலம் வெறும் 350 மி.லி ரத்தம் மட்டுமே எடுக்கப்படுகிறது. ஆரோக்கியமான அனைவரும் 3 மாதத்திற்கு ஒரு முறை ரத்த தானம் செய்யலாம்’ இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

Related posts