இந்தியாசினிமா

68-வது தேசிய திரைப்பட விழா : நடிகர் சூர்யா டெல்லி பயணம்!

68-வது தேசிய திரைப்பட விழாவில் பங்கேற்பதற்காக நடிகர் சூர்யா டெல்லி சென்றுள்ளார்.

தேசிய விருது 

இந்திய அரசு சார்பில் திரைத்துறையை சேர்ந்த பல்வேறு கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் தேசிய விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 2020-ம் ஆண்டிற்கான தேசிய விருதுக்கான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அதில் கடந்த 2020-ம் ஆண்டு நடிகர் சூர்யா தயாரித்து நடித்த ‘சூரரைப் போற்று’ படத்திற்கு சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசை, சிறந்த படம் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகிய 5 பிரிவுகளில் தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், 68-வது தேசிய திரைப்பட விருதுகளை டெல்லியில் இன்று இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்குகிறார். இதில் பங்கேற்க நடிகர் சூர்யா தனது குடும்பத்தினருடன் டெல்லி சென்றுள்ளார்.

Related posts