நடிகை சன்னி லியோன் தமிழ் , தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒரு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதுடன் பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருக்கிறார் சன்னி லியோன். இவர் தனது கடந்த கால வாழ்க்கை குறித்து தற்போது வெளிப்படையாக சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
புதிய வெப்சீரியசில் ‘ஏஜென்ட் எம்’ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள சன்னி லியோன், அந்த வெப்சீரிஸுக்கான புரோமோஷனில் ஈடுபட்டுள்ளார். புரமோஷன் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், எனது கடந்த கால வாழ்க்கையில் நிறைய வலிகளும், கசப்பான அனுபவங்களும் இருந்திருக்கிறது. அது போன்ற நேரங்களில் நான் எடுத்த முடிவுகளை வேறு யாரும் எடுத்துவிடக் கூடாது என நினைக்கிறேன்.
ஆனால், நான் ஒருபோதும் என் மனதிற்கு பொய்யாக நடந்து கொண்டதில்லை. என்னைப் பற்றி எதையும் யாரிடமும் மறைக்க நினைத்ததில்லை. நான் நானாகவே வெளிப்படையாக இருந்தேன். இப்போது நான் சந்தோசமாக இருக்கிறேன். வாழ்க்கையை அனுபவித்து வாழ்கிறேன் என தெரிவித்துள்ளார்.
ஆபாசம் வேறு வாழ்க்கை வேறு :
ஆபாச படங்களில் நடித்தவர் என்று சன்னி லியோன் மேல் விமர்சனங்கள் இருந்தாலும் கடந்த 2018 ஆம் ஆண்டு டேனியல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இப்போது கணவருக்கும் அவருக்கும் இடையில் நல்ல புரிதல் இருப்பதாகவும், நிறைய நேரத்தை கணவரோடே செலவிடுவதாகவும் தெரிவிக்கும் சன்னி லியோன், இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தும் வருகிறார்.
மேலும், ஏழை குழந்தைகளுக்கு உதவுவதோடு, நற்செயல்கள் பலவற்றிற்கும் உதவி வருகிறார் சன்னி லியோன்.