ஃபர்ஸ்ட் சிங்கிள்
‘திரெளபதி’, ‘ருத்ரதாண்டவம்’ படங்களை இயக்கியத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் மோகன் ஜி. இதனையடுத்து அவர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘பகாசூரன்’. இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையமைக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ‘பகாசூரன்’ திரைப்படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகும் என்று இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
#SivaSivayam First single from tomorrow. A @SamCSmusic musical.. #Bakasuran #பகாசூரன் @natty_nataraj @mohandreamer @Mrtmusicoff @Gmfilmcorporat1 @subbiahshan @ProBhuvan pic.twitter.com/2MvFouNSBC
— selvaraghavan (@selvaraghavan) September 20, 2022

