உலகம்சினிமா

பிரபல ஹாலிவுட் நடிகை மருத்துவமனையில் அனுமதி!

பிரபல ஹாலிவுட் நடிகை கேட் வின்ஸ்லெட் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹாலிவுட் நடிகை

உலகப் புகழ் பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகை கேட் வின்ஸ்லெட் டைட்டானிக், தி ரீடர் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். இவர் தற்போது ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் 2 ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ படத்தில் நடித்துள்ளார். ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் டிசம்பர் 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து எலன் குராஸ் இயக்கி வரும் ‘லீ’ திரைப்படத்தில் கேட் வின்ஸ்லெட் நடித்து வருகிறார்.

மருத்துவமனையில் அனுமதி

இந்நிலையில், குரோஷியா நாட்டில் நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பின் போது நடிகை கேட் வின்ஸ்லெட் திடீரென கீழே விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

Related posts