அரசு பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5-ம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்களுக்கு வருகிற 8-ம் தேதி வரை காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிக்கப்படுவதாக தொடக்க கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.
விடுமுறை நீட்டிப்பு
இது தொடர்பாக தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி வெளியிட்டுள்ள அறிக்கையில், 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு அக்டோபர் 6 முதல் 8-ம் தேதி வரை பயிற்சி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி தொடக்க கல்வி இயக்குனரகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை அக்டோபர் 8-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வரும் 6-ம் தேதி முதல் பள்ளி வழக்கம் போல் செயல்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

