சினிமாவெள்ளித்திரை

வாரிசு படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்!

படப்பிடிப்பு

வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘வாரிசு’. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், வாரிசு படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் வம்சி பைடிபள்ளி உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால்தான் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அடுத்தவாரம் படப்பிடிப்பை தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Related posts