இந்தியாசினிமா

நகைச்சுவை நடிகரின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

பிரதமர் இரங்கல்

ஹிந்தி சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் இருந்தவர் நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவா. இவர் மெயினி பியார் கியா, பாஸிகர், பிக் பிரதர், பாம்பே டூ கோவா ஆகிய படங்களில் நடித்தது மூலம் பிரபலமானார். 59 வயதாகும் இவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவா சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

இவரது மறைவுக்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அந்தவகையில், பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார்.

Related posts