பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் பார்க்கிங் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
பார்க்கிங் கட்டணம்
சென்னை மெட்ரோ ரயில் பயணிகள் தங்களது இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் வசதி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பார்க்கிங் கட்டணம் மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் நான்கு சக்கர வாகனங்களை 6 மணி நேரம் நிறுத்தி வைப்பதற்கு ரூ.20-ஆகவும், 12 மணி நேரம் நிறுத்துவதற்கு ரூ.30 கட்டணமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
பார்க்கிங் கட்டண உயர்வால் மெட்ரோ ரயில் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.