சினிமாவெள்ளித்திரை

போனிகபூரிடம் ஏகே61 பட அப்டேட் கேட்ட பிரபல இயக்குனர்!

ஏகே61 அப்டேட்

‘திரெளபதி’, ‘ருத்ரதாண்டவம்’ ஆகிய படங்களை இயக்கிய மோகன் ஜி அடுத்தது ‘பகாசூரன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், சாம்.சிஎஸ் இசையமைக்கும் இப்படத்தின் முதல் பாடல் இன்று மாலை வெளியாகும் என்று படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.

இயக்குனர் மோகன் ஜி

இந்நிலையில், அஜித் நடிப்பில், எச்.வினோத் இயக்கி வரும் ஏகே61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ‘பகாசூரன்’ படத்தின் இயக்குனர் மோகன் ஜி, தயாரிப்பாளர் போனிகபூரிடம் ஏகே61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிடும் தேதியை கேட்டுள்ளார்.

Related posts