அரசியல்தமிழ்நாடு

சேடப்பட்டி முத்தையா மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்!

தமிழக சட்டமன்றத்தின் முன்னாள் தலைவர் சேடப்பட்டி முத்தையா உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

சேடப்பட்டியார் மறைவு

இதனையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், அரசியல் களத்தில் அனைவராலும் சேடப்பட்டியார் என்று அழைக்கப்பட்டவர் சேடப்பட்டி திரு. முத்தையா. இவர் 1991 -1996 ஆண்டுகளில் தமிழ்நாடு சட்டமன்ற தலைவராக இருந்தவர். மேலும், நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

இரங்கல்

உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சேடப்பட்டி முத்தையா அவர்களை அண்மையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் மறைந்த செய்தி கேட்டு வேதனையடைந்துள்ளேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

Related posts