இந்தியாசுற்றுசூழல்

டெல்லியில் பட்டாசுக்கு தடை – சுற்றுச்சூழல் துறை அறிவிப்பு !

டெல்லியில் பட்டாசுகளை விற்க, வெடிக்க, சேமித்து வைக் தடை விதித்து சுற்றுச்சூழல் துறை உத்தரவிட்டுள்ளது.

பட்டாசுக்கு தடை

அக்டோபர் 24-ம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், மாசு அபாயத்தில் இருந்து மக்களை காப்பாற்றும் நோக்கில் டெல்லியில் இந்தாண்டு பட்டாசுக்கு தடை விதித்து சுற்றுச்சூழல் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால்ராய் வெளியிட்டுள்ள அறிவிப்பில், டெல்லியில் இந்தாண்டு நேரடி பட்டாசு விற்பனைக்கும், ஆன்லைன் விற்பனைக்கும் தடை விதிக்கப்படுகிறது.

மேலும், இந்த தடை ஜனவரி 1, 2023 வரை அமலில் இருக்கும். இதற்கான செயல் திட்டத்தை டெல்லி காவல்துறை, டெல்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு மற்றும் வருவாய் துறையுடன் இணைந்து வகுக்கப்படும்.

Related posts