சினிமாவெள்ளித்திரை

பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தது பெருமை – நடிகை திரிஷா !

பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவி, விக்ரம் ஆகியோருக்கு சகோதரியாக நடித்துள்ளதாக நடிகை திரிஷா தெரிவித்துள்ளார்.

இசை வெளியீட்டு விழா

கல்கியின் எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை மையமாக வைத்து மணிரத்னம் இயக்கியிருக்கும் திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தில் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா ஆகியோர் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக தயாராக உள்ள இந்த படத்தின் முதல் பாகம் வரும் 30-ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. அந்தவகையில் பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர்.

திரிஷா பேச்சு

இந்நிலையில், இவ்விழாவில் கலந்துக் கொண்ட நடிகை திரிஷா பேசுகையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்தது எங்களுக்கு பெருமை. மேலும், விக்ரம், ஜெயம் ரவி ஆகியோருடன் இணைந்து ஏற்கனவே நடித்துள்ளேன். ஆனால் இந்த படத்தில் அவர்களுக்கு சகோதரியாக நடித்திருக்கிறேன்.

 

Related posts