அரசியல்இந்தியா

கன்னியாகுமரியில் பாத யாத்திரையை தொடங்கினார் ராகுல் காந்தி !

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று 600 மீட்டர் நடை பயணத்தை தொடங்கினார்.

பாத யாத்திரை

காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் ‘இந்திய ஒற்றுமை பயணம்’ என்ற பெயரில் ராகுல் காந்தி தலைமையில் பாத யாத்திரை இன்று தொடங்கியது. கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பாத யாத்திரை காஷ்மீர் வரை 3,500 கி.மீ தூரம் பாத யாத்திரையாக 150 நாட்கள் நடந்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்த பாதயாத்திரையின் போது நாடு முழுவதும் உள்ள பல தரப்பட்ட மக்களை சந்திக்கவுள்ளார் ராகுல் காந்தி. பாத யாத்திரையை தொடங்குவதற்காக நேற்று இரவு டெல்லியில் இருந்து சென்னை வந்தடைந்தார் ராகுல் காந்தி.

ராகுல்காந்தி

இன்று காலை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது தந்தை ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்றார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் கன்னியாகுமரி சென்றுள்ளார். அதனையடுத்து காந்தி மண்டபத்தில் ராகுல் காந்தி பாத யாத்திரையை தொடங்கினார்.

 

Related posts