சினிமாவெள்ளித்திரை

விருமன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஓடிடி ரிலீஸ்

குட்டிப்புலி, கொம்பன் படத்தின் பிரபலமான இயக்குனர் முத்தையா இயக்கத்தில், நடிகர் கார்த்தி நடிப்பில் ஆகஸ்ட் 12-ம் தேதி வெளியான திரைப்படம் ‘விருமன்’. இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம் சார்பில் தயாரித்த இத்திரைப்படம் வியாபார ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ‘விருமன்’ திரைப்படம் வருகிற 11-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

 

Related posts