பயணம்

ஆப்பிரிக்காவில் இப்படியும் சில இடங்களா??? அதிகம் அறியப்படாத ஆப்பிரிக்க சுற்றுலா தலங்கள்

ஆப்பிரிக்கா என்றவுடன் வறட்சியும் வறுமையும் நிறைந்த மக்கள் கூட்டம்.அடர்ந்த காடுகள், நவீன வாழ்வியலின் நிழல் கூட படாத பிரதேசங்கள். இது போன்ற காட்சிகள் உங்கள் மனதில் எழுந்தால், அந்த எண்ணத்தை இன்றே மாற்றி விடுங்கள்.

உலகின் தலைசிறந்த சுற்றுலா தளங்கள் ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ளன என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா ?

ஆம். இருண்ட கண்டம் என்று பல நூற்றாண்டுகளாக அழைக்கப்பட்டு வந்த ஆப்பிரிக்காவின் தீவுகளும் கடற்கரைகளும் பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகளை ஆண்டுதோறும் ஈர்த்து வருகின்றன.

அவற்றுள் சிறந்த ஐந்து சுற்றுலா தலங்களை இந்த கட்டுரை வாயிலாக அறிந்துகொள்வோம் வாருங்கள்.

பஸாரூடோ தீவு :

மொசாம்பிக் (Mozambique) நாட்டின் கடல் பகுதியில் அமைந்துள்ள அழகான தீவு. வெள்ளை நிற மணலும், வெளிர் நீல நிற கடல் நீரும் நம் பார்வைக்கு விருந்தளிக்கும் வண்ணம் அமைந்துள்ளன.

ஆங்காங்கே நிழல் தரும் குட்டையான பனை மரங்களும், மணல் திட்டுகளும் நாம் ஏதோ சொர்க்கத்தில் இருப்பது போன்ற மாயையை உருவாக்குகின்றன.

சுற்றுலா பயணிகள் நிழலில் அமர்ந்து கடற்காற்றை சுவாசித்துக்கொண்டே கடல் அலைகளின் அழகை ரசிக்க ஆங்காங்கே மூங்கில் மற்றும் பனை ஓலைகளால் வேயப்பட்ட குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

குழந்தைகளுடன் கோடை காலத்தை கழிக்க விரும்பினாலும் சரி. தேன் நிலவுக்கு செல்ல திட்டமிட்டாலும் சரி. இந்த பஸாரூடோ தீவு தான் சரியான தேர்வு.

Camps Bay கடற்கரை :

தென் ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள கேப் டவுன் பகுதியில் அமையப்பெற்ற அற்புத கடற்கரை. கடல் அலைகளின் மீது சாகசம் செய்ய விரும்புபவர்களுக்கு இந்த இடம் தான் முதல் தேர்வு.

நீளமும் பச்சையும் கலந்த கடல் நீர் ஒரு புறம். உயர்ந்த மலை முகடுகள் வேலிகள் போல அமையப்பெற்ற இயற்கை அழகு மறுபுறம்.

இப்படிப்பட்ட இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரையை வாழ்வில் ஒரு முறையேனும் சென்று பார்த்து விட வேண்டும்.

Nungwi கடற்கரை :

தன்சானியா நாட்டில் உள்ள இந்த கடற்கரை சற்று வித்தியாசமான ஒன்று. ஆரம்ப காலத்தில் ஒரு மீனவ கிராமமாக இருந்த இந்த கடற்கரை பிரதேசம், காலப்போக்கில் சுற்றுலா பிரதேசமாக உருமாறியது.

மரப்பலகைகளை அடுக்கி உருவாக்கப்பட்ட சந்தைகள் இங்கே பிரபலம். கடலை பார்த்த படி அமைந்திருக்கும் இந்த வணிக பகுதியில் நீங்கள் எந்த பொருளையும் வாங்காவிட்டால் பரவாயில்லை. இதன் அழகை காண்பதற்காகவேனும் ஒரு முறை சென்று வரலாம்.

La Digue தீவு :

சிஷெல்ஸ் நாட்டில் அமைந்துள்ள அழகான தீவு. இந்திய பெருங்கடலின் நடுவே அமைந்திருக்கும் இந்த தீவில் அடர்ந்த காடுகளுடன் உள்ளன.

மிகப்பெரிய பாறைகளும் காணப்படுகின்றன. இந்த தீவில் சில நாட்கள் தங்கி பொழுதை கழிக்க நிறைய விடுதிகள் உள்ளன.

Naama Bay :

எகிப்து நாட்டில் வெறும் பிரமிடுகளும் மம்மிகளும் மட்டுமல்ல. கண்ணை கவரும் அழகிய கடற்கரையும் உள்ளது.

இந்த நாமா பே (Naama bay ) கடற்கரை , பனிக்காலங்களில் அதிக கூட்ட நெரிசலுடன் காணப்படும்.

இங்கு சுற்றி பார்க்க வரும் ஏராளமானோர் கடலில் பவளப்பாறைகளை காண கடலுக்குள் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். Scuba diving எனப்படும் நீச்சல் பயிற்சியும் இங்கு அளிக்கபடுகிறது.

Related posts