தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கையை படமாக எடுக்கபோவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
முதல்வர் ஸ்டாலின்
கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று முதல்முறையாக தமிழக முதல்வர் ஆனார் மு.க.ஸ்டாலின். அவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று சொல்லி பதவவியேற்ற பிறகு தமிழ் சினிமாவில் அவரின் வாழ்க்கையை படமாக்கும் எண்ணம் எழவில்லை என்றால் தான் ஆச்சரியம். ஸ்டாலின் அவ்வளவு எளிதில் அரியணையை பிடித்து விடவில்லை. அதற்கு முன்பு பல ஆண்டு கால உழைப்பு இருக்கிறது. அதின் தொடர்ச்சியாக தான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று சொல்லி பதவியேற்ற போது அனைவருக்கும் மெய்சிலிர்க்க வைத்தது.
பயோபிக்
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கையைப் படமாக எடுக்க போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதற்காக ஒரு தனி குழு நியமித்து வேலைகள் நடப்பதாக கூறப்படுகிறது. ஸ்டாலின் உருவ ஒற்றுமையில் மிகவும் சரியாக இருக்கிறவரை கண்டுபிடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் எடுக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. திராவிட இயக்கப் பின்னணி அறிந்த ஒருவர் தான் இந்த திரைக்கதையை எழுதுகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
உதயநிதி ஸ்டாலின்
நேற்று வெளியாகி நல்ல விமர்சனகளை பெற்று வரும் ‘டான்’ படத்தை தமிழகத்தில் வெளியிட்டவர் உதயநிதி ஸ்டாலின். அவர் அந்த படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது டான் படத்தில் சமுத்திரகனி கதாப்பாதிரமும் என் அப்பாவின் கதாப்பாதிரமும் ஒன்று தான். நான் படம் எடுப்பதை அவர் விரும்பவில்லை. என்னை இயக்குனர் ஆக வேண்டாம் என்று தடுத்தார். எனது இன்ஜினியரிங் படிப்பை நிறுத்தி விட்டு, சினிமா பயிற்சி பள்ளியில் சேர வேண்டும் என்று நினைத்தேன் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார்.
இதனால் மு.க.ஸ்டாலின் வாழ்க்கையை உதயநிதியே எடுக்க அதிக வாய்ப்பு உள்ளதாக ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.