பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாகனம் செல்வதற்காக ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டதாக எழுந்த சர்ச்சைக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்துள்ளார்.
ஆம்புலன்ஸ் நிறுத்தம்
கடந்த வாரம் கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பையும், அதற்காக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அரசு அலுவலர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள தஞ்சாவூர் மாவட்டம், அணைகக்ரை ஆய்வு மாளிகைக்கு அணைக்கரை பாலம் வழியாக அமைச்சரின் வாகனம் சென்றுள்ளது. அப்போது எதிரே வந்த ஆம்புலன்ஸ் ஒன்று காவல்துறையினரால் நிறுத்தப்பட்டது. அதனையடுத்து அமைச்சரின் வாகனம் சென்ற பிறகே ஆம்புலன்ஸ் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இது வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையானது.
ஆட்சியர் விளக்கம்
இந்நிலையில், இது குறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘அணைகக்ரை பாலம் என்பது ஒரு வழியாக மட்டுமே செல்லக்கூடிய பாலம். ஒரு வழியாக வாகனங்கள் வந்தால் மறுபுறத்தில் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாது. அமைச்சரின் வாகனம் பலத்திற்குள் நுழைந்த பிறகு தான் ஆம்புலன்ஸ் வந்துள்ளது. இதன் காரணமாக தான் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டது’ என்று கூறியுள்ளார்.

